மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10,449 கன அடியில் இருந்து நேற்று 9,542 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 106.98 அடியில் இருந்து 107.44 அடியாகவும், நீர் இருப்பு 74.18 டிஎம்சியில் இருந்து 74.82 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,500 கன அடியாக குறைந்தது.