புதுடெல்லி: குறிப்பிட்ட மாநிலங்களில் மின் ஒப்பந்தம் பெற அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தன என்று பாஜகவின் ஐடி தலைவர் அமித் மாளவியா கூறியுள்ளார். இதுகுறித்து அமித் மாளவியா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் (நவ. 25) அதானி மீதான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், லஞ்சக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட காலத்தில் (ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரை), மாநிலங்களில் ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே ஆட்சியில் இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.