வேலூர்: 16 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து போக்ஸோ வழக்கில் சிக்கிய முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
16 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 61 வயது முன்னாள் ராணுவ வீரர் சேகருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த மாணவி கடந்த 2022 ஆம் ஆண்டு 7 மாத கர்ப்பம் அடைந்த நிலையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சேகர் மீது புகாரளிக்கப்பட்டது.