சென்னை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சக்திகாந்த தாஸ் உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு அவசரநிலை அல்ல, ஆனால் அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அசிடிட்டி பிரச்சனை காரணமாக சக்திகாந்த தாஸ் இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தற்போது உடல்நிலை சீராக உள்ளதால், அடுத்த 2-3 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.