கடலூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, இன்று காலை 11 மணியளவில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழி, பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே ஏராளமான பா.ம.க.வினர் திரண்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி இல்லை என பாமக நிர்வாகிகளிடம் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தடையை மீறி பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பத்து பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
போராட்டத்தின் போது, தனியார் பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அப்போது பாமகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு சிதம்பரம் காந்தி சிலை பகுதியில் சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.