புதுடெல்லி: அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1985-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி பணிக்கு தேர்வு செய்யப்பட்டவரின் சான்றிதழ், 2010 ஜூலை 7-ம் தேதி, அதாவது ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்புதான் சரிபார்க்கப்பட்டதாக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், மனுவை விசாரித்த , ஆர்.மகாதேவன் ஆகியோர், ‘அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள், குடியுரிமை, ஆவணங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை 6 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் சரிபார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.