By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி
    1 Min Read
    சீனாவின் கடும் எச்சரிக்கை – பிரம்மபுத்திரா நதியை நிறுத்தும் அபாயம்
    1 Min Read
    இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு இடையே புதிய ஒப்பந்தம்
    1 Min Read
    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஒப்புதல்
    1 Min Read
    நாசா புதிய தலைவர்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் அறிவிப்பு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    போர் நிறுத்தம் இந்தியாவின் தீர்மானம் – அமெரிக்கா காரணமல்ல என தெளிவுபடுத்தல்
    1 Min Read
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது
    2 Min Read
    பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ராகுல் கடிதம்
    2 Min Read
    ஜூனையில் வெளியாகும் PM-KISAN திட்டத் தொகை: விவசாயிகள் எதைக் கவனிக்க வேண்டும்?
    2 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் 3 கி.மீ. தூரத்திற்கு காத்திருந்து தரிசனம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திமுக தேர்தல் நெருங்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார்
    2 Min Read
    எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு: நடிகர் விஜய் வருத்தம்
    2 Min Read
    திமுக உறுப்பினர்களுக்கான நிவாரண நிதி: ஸ்டாலின் புதிய அறிவிப்பு
    2 Min Read
    இளைஞர்களை ஏமாற்றும் புதியவர்களுக்கு பதிலடி தேவை : ஸ்டாலின்
    2 Min Read
    இன்று முதல் விமான சேவைகளில் மாற்று ஏற்பாடு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 9ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > 9ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு
தமிழகம்

9ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு

Nagaraj
Last updated: December 7, 2024 5:36 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

11-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

12-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

13-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

You Might Also Like

திமுக தேர்தல் நெருங்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார்

எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு: நடிகர் விஜய் வருத்தம்

திமுக உறுப்பினர்களுக்கான நிவாரண நிதி: ஸ்டாலின் புதிய அறிவிப்பு

இளைஞர்களை ஏமாற்றும் புதியவர்களுக்கு பதிலடி தேவை : ஸ்டாலின்

இன்று முதல் விமான சேவைகளில் மாற்று ஏற்பாடு

TAGGED:13th13ம் தேதிHeavy RainMadurainotificationTenkasiVirudhunagarஅறிவிப்புகனமழைதென்காசிமதுரைவிருதுநகர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?