தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன். குமார் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
பொன். குமார் அமைப்பின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், அதிகளவு வேலை வாய்ப்பு தரும் கட்டுமான தொழில் முடங்கியுள்ளது. கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்படும் சிமென்ட் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக எம்.சாண்ட் விலை அதிகரித்துள்ளது.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். முதல்வர் இதில் தலையிட்டு விலைவாசியை குறைப்பதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். வைரம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் கோரினால், அதற்குப் பதிலாக கட்டுமானத் தொழிலாளர்களின் அலுவலகங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தியும் டிச., 20-ல் திண்டுக்கல்லில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.