சென்னை: குழந்தைகளுக்கு வழக்கமான உணவுகள் செய்து கொடுத்து அலுத்து விட்டதா. அவர்கள் விரும்பி சாப்பிடவும், ஆரோக்கியமும் நிறைந்த பனங்கற்கண்டு பால் பொங்கல் செய்து தாருங்கள்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – 100 கிராம்
பனங்கற்கண்டு – 100 கிராம்
தேங்காய்த் துருவல் – கால் கப்
ஏலக்காய், உலர் திராட்சை – சிறிதளவு
முந்திரி – 5
பால் – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
pasteurization,alfalfa,cashews,grated coconut ,பச்சரிசி, பாசிப்பருப்பு, பனங்கற்கண்டு, தேங்காய்த் துருவல்
செய்முறை: மிக்சி ஜாரில் பனங்கற்கண்டை எடுத்து நன்கு அரைத்து பொடித்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து கழுவிய பச்சரிசியுடன் பாசிப் பருப்பு, பால் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சையை வறுத்து, அதனுடன் வேக வைத்த பச்சரிசியையும் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் பனங்கற்கண்டு, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். இறுதியில் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான, சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி.