சென்னை: தமிழகத்தில் அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 2026-க்கு பிறகு அதிமுக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி வருகிறது அவரது நடவடிக்கைகள்.2026ல் வெற்றி பெறுவோம் என எடப்பாடி கூறியிருப்பது மூடநம்பிக்கையுடன் பேசுவது போல் தெரிகிறது.
அவரது நடவடிக்கைகள் மற்ற கட்சிகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும். அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி இருப்பது தற்காலிகமானது. மக்கள் மன்றத்தில் தோல்விகளை சந்திக்கிறார். அதிமுகவை அழியாமல் இருக்க வேண்டுமானால் பாஜக கூட்டணியில் சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு பதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது. அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி எப்படி இருக்கும் என எடப்பாடி கூறியுள்ளார்; அதன்படி செயல்படுவோம். தங்கள் இருப்பை தக்கவைக்க அதிமுக கூட்டணி சேரும் என சிலர் கூறுவதாக டிடிவி தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார்.