சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் நேற்று வெளியானது. சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வெற்றிமாறன் பதிலளித்தார்.
அப்போது, ‘வட சென்னை 2’ படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ‘இப்போது எந்த திட்டமும் இல்லை’ என்று வெற்றிமாறன் கூறினார். தனுஷ், சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்த வட சென்னை திரைப்படம் 2018-ல் வெளியானது. இந்த படத்தில் வெற்றிமாறன் வடசென்னை மக்களை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அதன்பிறகு, ஆண்ட்ரியா அரை நிர்வாணமாக இருந்த காட்சிகளும் எதிர்ப்புகளால் நீக்கப்பட்டன. சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக சில வருடங்களுக்கு முன் டைட்டில் அறிவிப்பு வெளியானது. ஆனால், படம் இன்னும் தொடங்கவில்லை.
கங்குவா, சூர்யா 44, சூர்யா 45 ஆகிய படங்களில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக அமல் நீரத் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக ‘வாடிவாசல்’ படத்தைத் தயாரிக்கப் போவதாக உறுதியாக தெரிவித்துள்ளார். ‘வாடிவாசல்’ படத்தில் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் சூர்யா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் வரிசையாக படங்களில் நடித்து வருவதால் சூர்யா அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.