சென்னை: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். சுயதொழில் செய்பவர்கள், வேலையில்லாத இளைஞர்கள், முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள். சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆயுள் காப்பீடு விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றவர்கள், சொந்த பகுதியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள், சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்க தகுதிகள். மற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முகவர்களாக இருப்பவர்கள் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
முகவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் விற்கும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் பிரீமியத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 4-ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.