திருச்சியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உட்பட பல இடங்களில் கொலைகள் நடக்கின்றன. அனைத்து தரப்பினரும் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டம் நடத்தி சிறந்த ஆட்சியை தருகிறோம் என்கிறார்கள்.
தமிழர்களின் அடையாளத்தை மறைத்து பேருந்து நிலையங்களுக்கும் நூலகங்களுக்கும் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகிறது. தேவையில்லாத எந்த திட்டத்துக்கும் முதலில் கையெழுத்து போடுவது காங்கிரஸும் திமுகவும்தான். அமலாக்கத் துறை சோதனைக்கு பயந்து திமுக, அதிமுக கூட்டங்களில் பாஜகவுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதில்லை. நடிகர் விஜய் எனது சகோதரர். திமுகதான் எனக்கு எதிரி. ஈரோடு இடைத்தேர்தலில் கண்டிப்பாக தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு சீமான் கூறினார்.