By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பயணிகள் ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பயணிகள் ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றம்..!!
தமிழகம்

பயணிகள் ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றம்..!!

admin
Last updated: December 30, 2024 10:52 am
By admin 2 Min Read
Share
SHARE

சென்னை: கொரோனா பாதிப்பின் போது பயணிகள் ரயில்களுக்கு பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவை வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள 296 பயணிகள் ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றப்படுகின்றன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாதனமாக பயணிகள் ரயில்கள் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், 2020-ல் கொரோனா பரவலின் போது பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்களைக் கொண்ட பயணிகள் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. சிறப்பு விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அதாவது, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30. இந்த ரயில்களை வழக்கமான பயணிகள் ரயில்களாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, குறைந்த தூரம் இயக்கப்படும் சாதாரண பயணிகள் ரயில்களின் கட்டணம் கடந்த பிப்ரவரி மாதம் குறைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மெமு மற்றும் பயணிகள் ரயில்களிலும் 2-ம் வகுப்பு சாதாரண கட்டணம் ரூ.30-லிருந்து ரூ. 10 ஆக குறைக்கப்பட்டது.

இருப்பினும், அந்த நேரத்தில் பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 288 பயணிகள் ரயில்கள், நீலகிரி மலை ரயில் பாதையில் இயங்கும் 8 பயணிகள் ரயில்கள் உட்பட பூஜ்ஜியத்தில் தொடங்கும் 296 ரயில்களின் எண்கள் வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. சென்னை எழும்பூர் – புதுச்சேரி, சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இதில் அடங்கும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ​​“ரயில் புறப்படும் நேரம், வரும் நேரம், புறப்படும் இடம், வரும் இடங்கள், நிற்கும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள ரயில் எண் அவசியம். கொரோனா காலத்தில் சிறப்பு பயணிகள் ரயில் எண் வழங்கப்பட்டது. இனி, முறைப்படுத்தப்பட்டு, வழக்கமான ரயில் எண்கள் வழங்கப்படும்,” என்றனர். இந்த மாற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய எண்கள் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையில் சேர்க்கப்படும்.

You Might Also Like

வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்

35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்

குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்

உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?

கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

TAGGED:change numberspassengerRailwayஎண்ணிக்கைபயணிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?