By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவியது!
    2 Min Read
    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்..!!
    1 Min Read
    எங்கள் மகனின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுங்கள்… சார்ஜாவிலிருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை
    2 Min Read
    கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திப்பார்… அதிபர் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை
    2 Min Read
    வரும் 11ம் தேதி இம்ரான்கான் ஜாமீனில் விடுதலை… பிடிஐ கட்சி மூத்த தலைவர் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாட்ஸ் அப்-ல் புதிய அம்சம்… பயனர்கள் வரவேற்பு
    1 Min Read
    விண்வெளி பயணம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு
    0 Min Read
    சின்னசாமி மைதானம் வேறு இடத்திற்கு மாற்றமா? கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்
    1 Min Read
    விஜிஞ்சம் துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்..!!
    2 Min Read
    தேர்தல் விவரங்கள்: தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு ராகுல் காந்தி பாராட்டு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
    2 Min Read
    உடல் உறுப்புகள் சீராக இயங்க வழிவகை செய்யும் தண்ணீர்!
    1 Min Read
    பெண்களுக்கு மனதிற்கு பிடிக்காத மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது
    1 Min Read
    விருப்பமின்றி கூட திருமணத்திற்கு பெண்கள் தயாராவதற்கு என்ன காரணம்?
    1 Min Read
    பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மாணவர்களுக்கு சீருடை வழங்க தாமதம்: கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பெற்றோர்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மாணவர்களுக்கு சீருடை வழங்க தாமதம்: கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பெற்றோர்!
தமிழகம்

மாணவர்களுக்கு சீருடை வழங்க தாமதம்: கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பெற்றோர்!

Periyasamy
Last updated: January 8, 2025 1:08 pm
By Periyasamy 2 Min Read
Share
SHARE

கோவை: மாநில பாடத்திட்டத்தின் கீழ் 37,576 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் இருந்து துணியைப் பெற்று சமூக நலத்துறையின் அங்கீகாரம் பெற்ற சங்கத்திடம் கொடுத்து சீருடைகள் தைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கல்வியாண்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதில், தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. 1-ம் வகுப்புக்கு மட்டும் சீருடை வழங்குவதில் 7 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சமூக நலத்துறை மூலம் சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் ஆயத்த சீருடைகளை பயன்படுத்துவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அருகிலுள்ள துணிக்கடைகளில் இருந்து ரூ. 200 மற்றும் ரூ. 400 வரை ரெடிமேட் சீருடைகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும், பள்ளியில் சேரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏற்கனவே படித்த மாணவர்களின் அளவின் அடிப்படையில், சீருடை அளவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ​​ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அளவீடு செய்து சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், சரஸ்வதி பூஜை வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பிறகு, முதல் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எண் வழங்கப்பட்டது. மாணவர்களின் விவரம் தெரிய நவம்பர் மாதமாகிவிட்டது. பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வினியோகிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் இருந்து துணி கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜவுளிக் கழகம், சமூக நலத்துறைக்கு சீருடைக்கான துணியை வழங்கியதால், 15 நாட்களுக்குள் தைத்து வழங்க சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இப்பணியை ஜனவரி 25-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், சமூக நலத்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 4,000 மாணவர்களுக்கும், மாநிலத்தில் சுமார் 2.83 லட்சம் மாணவர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You Might Also Like

ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

உடல் உறுப்புகள் சீராக இயங்க வழிவகை செய்யும் தண்ணீர்!

பெண்களுக்கு மனதிற்கு பிடிக்காத மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது

விருப்பமின்றி கூட திருமணத்திற்கு பெண்கள் தயாராவதற்கு என்ன காரணம்?

பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!

TAGGED:ParentsstudentsUniformsதாமதம்மாணவர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?