சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த அளவு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.