மதுரை: மதுரையைச் சேர்ந்த காந்தி, வீரன் உள்ளிட்ட 35 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா காலத்தில் போராட்டம் நடத்தியதாக தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:-
2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் மனுதாரர்கள் போராட்டத்தில் பங்கேற்று பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலும், அப்போது காவல்துறையினருக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி போராட்டம் நடத்தினர்.
இந்த வழக்கில் நீண்ட விசாரணை எந்த பலனையும் அளிக்காது என்பதைக் கருத்தில் கொண்டு, மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.