தெலுங்கானா: தெலுங்கானாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன் அல்லது இரவு 11 மணிக்கு பிறகு திரையரங்குகளுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் திரைப்படம் பார்ப்பது குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதி விஜய்சென் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்குப் பிறகும் திரைப்படம் பார்ப்பதால் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தூக்கக் கலக்கம் ஏற்பட்டு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே, காலை 11:00 மணிக்கு முன் சிறப்பு காட்சிகளையும், இரவு 11 மணிக்கு பின் திரைப்படங்களையும் பார்க்க தடை விதிக்க வேண்டும் என, குழந்தைகள் மனநல மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி விஜயேசன் ரெட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்குப் பிறகும் சினிமா காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு பிப்ரவரி 22-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.