தமிழகத்தில் ஐ.எப்.எஸ். என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 84,000 முதலீட்டாளர்களிடம் 5,900 கோடி ரூபாய் மோசடி செய்த ஜனார்த்தனன், தாய்லாந்துக்கு தப்பிச் சென்றிருந்தார்.
இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாங்காக் விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். கோல்கட்டா விமான நிலையத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்து, தமிழக போலீசிடம் ஒப்படைத்தனர்.
ஜனார்த்தனன் ஒருவனே 87.50 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. மேலும், குஜராத்தில் 77 கோடி ரூபாய் மோசடி செய்த வீரேந்திரபாய் படேல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, ஆமதாபாத் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.