புதுடெல்லி: அசாமில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கூறினார்.
அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகள் அபாய கட்டத்தை தாண்டி பாய்கின்றன. மேலும் 6 பேர் பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.எக்ஸ் என்ற சமூக வலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அஸ்ஸாமில் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தொடரும் இக்கட்டான சூழ்நிலையால் லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல விலங்குகள் இறந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர்.
அசாமில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.