மலேசியா கடந்த சில நாட்களாக கடும் கனமழையை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பார்னேவில் பெய்யும் தொடர் மழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரையில் இந்த மழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு மையம் அமைந்துள்ள சாபா மற்றும் சரவாக் பகுதிகளில் 700 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. பின்டுலுவில் 48 மணிநேரத்தில் 800 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம், இந்த கனமழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலைமை அந்நாட்டு மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.