இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் தேரா இஸ்மாயில்கான் நகரில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.