மாலி: மாலி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் பலியாகி உள்ளனர் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கூலிகோரோ பகுதியில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்க தாதுக்களை தேடி ஏராளமானோர் சுரங்கப் பகுதியில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.