கேரளா: மத்திய பட்ஜெட்டில் கேரளா புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் கேரள மாநிலத்தின் பல்வேறு துறைகளின் முக்கிய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரண நிதி இல்லை. மாநிலங்களுக்கு ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டாலும், கேரளாவுக்கு ரூ.40,000 கோடி கூட கிடைக்கவில்லை. மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.