சென்னை: குடமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளது. வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தவும், பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. குடமிளகாய், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும்.
ஒரு நாளைக்கு 2 முட்டைகள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிட்டத்தட்ட முழுமையாக கிடைத்து விடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு முட்டையில் தோராயமாக 6 கிராம் புரதம் இருக்கும் நிலையில் 2 முட்டை சாப்பிட்டால், அதில் இருந்து நமக்கு 12 கிராம் புரதம் உடலுக்கு கிடைக்கும். இதன் மூலம் தினசரி செயல்பாடுகளை தடையின்றி செய்ய ஆற்றல் கிடைப்பதுடன் தசைகள் மற்றும் உடல் வலுவடையும்.
காசினி கீரையில் வைட்டமின் A, B, C, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இன்சுலின், லாக்டுசின், சாப்போனின், டானின் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளிட்ட சத்துகள் இதில் செறிந்து காணப்படுகின்றன. சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டால், சர்க்கரை அளவு வெகுவாக குறையும்.