சென்னை : தமிழக அரசின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட, ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்திற்கு, இதுவரை ரூ.500 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.
மேலும், எழுதுபொருட்கள், புத்தகங்கள், மேஜை, நாற்காலிகள் என, பயன்படும் பொருட்களாகவும் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு, ‘ரோபோட்டிக்ஸ்’ வரை புதிய தொழில்நுட்பங்களை கற்பிக்க அரசு தயாராகி வருகிறது.