நாகர்கோவில்: திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நாகர்கோவில் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருக்கும் பிற நாட்டவர்கள் விமானங்கள் மூலம் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் சிவபிரபு, தங்கராஜ் ஆதிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் மாவட்டத் துணைத் தலைவர் கிறிஸ்டோபர், பொருளாளர் ஜார்ஜ், பொதுச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.