சபரிமலை : மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு நெய் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தன
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் நேற்று(பிப்.12) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மேலும், இன்று காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற து.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.