புதுடெல்லி: புதுடில்லி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆண் மற்றும் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த கட்சியை காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு ஏப்ரல் மாதம் மாமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அனிதா பசோயா (ஆன்ட்ரூஸ் கஞ்ச்), நிகில் சப்ரானா (ஹரி நகர்), தரம்வீர் (ஆர்கேபுரம்) ஆகிய ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் கட்சிக்கு எதிர்காலம் இருக்காது என கருதி கவுன்சிலர்கள் ஆம் ஆத்மிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர் என அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர். டெல்லியில் ஆம் ஆத்மி கூடாரமே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.