பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை டிசம்பர் 2018-ல் தொடங்கினார். விவசாயிகளின் பயிர்ச் செலவுகளுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் 3 தவணைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 19-வது தவணையாக ரூ.2,000 இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.22,000 கோடியை வெளியிடுகிறார். இது குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “பிரதமரின் கிசான் யோஜனா திட்டம் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதி நிலையை தொடர்ந்து பலப்படுத்தும். இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ. 3.46 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.