சென்னை : 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகவும், ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.