சென்னை: பேருந்து வழித்தட எண், புறப்படும் நேரம், வரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய குறிப்பேடு பொதுவாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியைத் தொடங்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும். இந்த குறிப்பேடு இதுவரை தமிழில் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சில பணிமனைகளில் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது.
12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து பணிக்கு வருபவர்களுக்கு இப்படி கையூட்டு வழங்குவது ஏற்புடையதல்ல என ஊழியர்கள் சில இடங்களில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், “பணிமனைகளை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ஆங்கிலத்தில் குறிப்பேடு உருவாக்கப்பட்டது. தற்போது முழுமையாக தமிழில் மட்டுமே வழங்கப்படுகிறது.