தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தஞ்சை நகர் பகுதியில் கடந்த ஒரு மணிநேரம் கனமமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது_
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 வந்து நாளாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில பகுதியில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனுப்பப்படாமல் உள்ளது. இருப்பினும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையாதபவாறு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 10 மணிக்கு மேல் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, தென்னம நாடு, உறந்தைராயன் குடிகாடு உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தின் சில பகுதியில் சம்பா அறுவடைப்பணிகள் இன்னும் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இருப்பினும் இந்த மழையை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வயலை உழும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மழை தொடர்ந்தால் இன்னும் அறுவடை மேற்கொள்ளாமல் உள்ள விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.