சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில் மாநில மொழியான தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணித்து இந்தி மொழி இதழ்கள் வைக்கப்படுவதாக திமுக எம்பி பி.வில்சன் தனது எக்ஸ் இணையதளத்தில் எழுதியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இந்திய விமான நிலைய ஆணையம் தமிழைப் புறக்கணிப்பது சரியல்ல என்று குற்றம்சாட்டிய அவர், ஹிந்தி இதழ்களின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
இதை மறுத்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய பயணிகள் ஓய்வறைகளில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றவற்றை வைத்திருப்பதாக தங்களது எக்ஸ் இணையதளத்தில் எழுதினர். வந்து பார்க்கும் போது தமிழ் உள்ளிட்ட பிற மொழி செய்தித்தாள்கள், வார இதழ்களை பயணிகள் விமானத்தில் படிக்க எடுத்து சென்றிருக்கலாம்.
இந்தி மொழி இதழ்களை மட்டுமே பார்ப்பதால் இந்த பதிவை போட்டிருக்கலாம். எல்லா மொழிகளையும் ஒன்றாகப் பார்க்கிறோம். தனித்தனியாக எந்த மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளோம்.