புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. டெல்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து அமலாக்கத் துறை, சி.பி.ஐ. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண மோசடி வழக்கில் கெஜ்ரிவால் மீது அமலாக்க இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து 9 முறை சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாததால், அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கெஜ்ரிவாலை வீட்டில் வைத்து கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
தன்னை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அமலாக்க இயக்குனரகம் மற்றும் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா நாளை (ஜூலை 12) தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.