சென்னை : காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வாசித்து வரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது. நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு செய்யப்படும்.
அந்த வகையில், இந்த பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.