மும்பை: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபிஸ் சயீத் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008 மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக். பயங்கரவாதி ஹபிஸ் சயீத் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை.
பஞ்சாப் மாகாணம் ஜீலத்தில் காரில் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேரால் அவர் சுடப்பட்டதாகவும், இதில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை. அதேபோல, ஹபீஸ் சயீத் மகனும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும் மறுத்துள்ளது. எனவே வெகுவேகமாக பரவி வரும் இந்த தகவல் உண்மையா? பொய்யா என தெரியாத நிலையே தற்போது வரை நீடித்து விடுகிறது.