சென்னை : வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் விலை சரசரவென குறைந்து வருகிறது.
காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை மளமளவென குறைந்துள்ளது. பீன்ஸ் ₹30, சுரைக்காய் ₹8, கத்திரிக்காய் ₹10 முட்டைக்கோஸ் ₹8, கேரட் ₹15, காலிஃப்ளவர் ₹15,சௌசௌ ₹10, கருணைக்கிழங்கு ₹40 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெண்டைக்காய் ₹20, கோவைக்காய் ₹25 சாம்பார் வெங்காயம் ₹25, முள்ளங்கி ₹8, அவரைக்காய் ₹30, தக்காளி ₹10, சேனைக்கிழங்கு 20க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.