புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 12.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் கூறியுள்ளார்.
மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக கேள்வி எழுப்பி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வேலைவாய்ப்பு அளித்ததாக கூறி மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் நேற்று பதிலளித்தார்.
பிரதமர் மோடியின் நேர்மையான தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த 10 ஆண்டுகளில் மட்டும் 12.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு கிடைத்துள்ளன. கடந்த 2023-24ஆம் ஆண்டில் மட்டும் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக சாதனை. பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் காரணமாக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உலகிலேயே வெற்றிகரமான நாடாக இந்தியா திகழ்கிறது. இந்துக்களை அவமதித்த ராகுல் காந்தி தற்போது மதத்தின் பெயரால் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் பொய்களை பரப்பி மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்று ராகுல் காந்தியும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர். ஆனால் உலகத் தலைவர்கள் அப்படிச் சொல்லவில்லை. உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் இந்தியாவை பாராட்டி வருகின்றன. நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும், வேலை வாய்ப்பை உருவாக்குவதில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் புகழ்ந்து வருகின்றனர்.
குறைந்த வேலைவாய்ப்பின்மை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 முதல் 2014 வரை 2.9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அரசு 10 ஆண்டுகளில் 12.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 2017ல் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. அவர் கூறியது இதுதான்.