சென்னை: ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினம் மற்றும் கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினம் ஆகியவற்றை முருகனுக்கு விரதம் இருந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ள நிலையில் கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து அவருடைய அருளை பெறுவோம்.
கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தினத்தன்று விரதத்தை ஆரம்பித்து வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று விரதம் இருக்க வேண்டும்
எந்த ஒரு மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு மேல் வரும் நாளே கார்த்திகை நட்சத்திரத்தில் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை விரதம் இருப்பவர்கள் முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு உண்டு அதன்பின் மறுநாள் வரை உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.
விரதம் இருக்கும் நேரத்தில் முருகனின் மந்திரங்கள் கந்த சஷ்டி புராணம் திருப்புகழ் கந்தர் கலிவெண்பா ஆகியவற்றை படிக்க வேண்டும். உணவு உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் பழம், பால் ஆகியவற்றை மட்டும் உண்டு கொள்ளலாம்.
கார்த்திகை தினம் பகல் மற்றும் இரவு உறங்காமல் முருகன் வழிபாடு செய்து தியானத்திலிருந்து மறுநாள் காலையில் நீராடி கார்த்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.