சென்னை: வழக்கமான தோல் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் கழுத்து பகுதி மற்றும் முகம் முழுவதும் ஐஸ் க்யூப்ஸ்களை கொண்டு தேய்ப்பது மிக பெரிய நன்மைகளை அளிக்கும்.
ஆரோக்கிய நோக்கங்களுக்காக உடலின் ஒரு பகுதியில் ஐஸ் பயன்படுத்துவது குளிர் சிகிச்சை அல்லது கிரையோதெரபி என்று அழைக்கப்படுகிறது. ஐஸ் ஃபேஷியல் அல்லது கிரையோ ஃபேஷியல் ஆகியவை தற்போது ட்ரெண்டாகி வரும் சரும பராமரிப்பு முறைகளாக இருந்து வருகின்றன. ஸ்கின் கண்டிஷனை பொருட்படுத்தாமல் முகத்தில் ஐஸ் க்யூப் பயன்படுத்துவது உங்கள் முகத்திற்கு பல அற்புதங்களைச் செய்யும்.
முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதால் கிடைக்கும் மிக பெரிய பயன்களில் இது முக்கியமானது. எரிந்த சருமத்தில் ஐஸ் வைக்க வேண்டும் அல்லது ரத்த காயம் இருந்தால் அதில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும் என்று உங்கள் அம்மா சிறிய வயதில் சொன்னதை இங்கே நினைவில் கொள்ளுங்கள்.
ஐஸ் கட்டிகளை சருமத்தில் பயன்படுத்துவது தோல் அழற்சி அல்லது வெயிலுடன் தொடர்புடைய எரிச்சல் உணர்வை அமைதிப்படுத்தும். உங்கள் ஃபேஸ் மேக்கப்பை தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் முகத்தில் ஒரு 5 நிமிடங்கள் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் மேக்கப் மிருதுவாக இருப்பது மட்டுமின்றி, நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.