By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திமுக ஆட்சி 2026 சட்டசபை தேர்தலில் அகற்றப்படும்: அமித்ஷா உறுதி..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > திமுக ஆட்சி 2026 சட்டசபை தேர்தலில் அகற்றப்படும்: அமித்ஷா உறுதி..!!
இந்தியா

திமுக ஆட்சி 2026 சட்டசபை தேர்தலில் அகற்றப்படும்: அமித்ஷா உறுதி..!!

admin
Last updated: March 30, 2025 1:53 pm
By admin 3 Min Read
Share
SHARE

புதுடெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் முற்போக்கான மாநிலமாக கருதப்பட்டது. ஆனால் திமுக அரசின் தவறான கொள்கைகளால் தமிழகம் தடுமாறி, குழப்பத்தில் உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் செயல்தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

அதனால் தான் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக பேசுகிறார். தமிழக அரசு முதலில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. பின்னர் திடீரென அதை ஏற்க மறுத்தது. இது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. ஊழல் விவகாரங்களால் ஆளும் திமுக அரசின் மீது மக்கள் ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வாரிசு அரசியலை முன்னெடுத்து வருகிறார். அவர் தனது மகன் உதயநிதியை விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கிறது.

இந்த உண்மை தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். தேசிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதை அமல்படுத்தினால் தமிழில் கல்வி கற்பிக்கப்படும். பொறியியல் மற்றும் மருத்துவம் தொடர்பான உயர்கல்வி படிப்புகளும் தமிழில் கற்பிக்கப்படும். பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அவர்கள் அதை இதுவரை ஏற்கவில்லை. பொறியியல் கல்வி தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. சுமார் 1,500 பட்டப் புத்தகங்கள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

ஆனால் திமுகவின் எதிர்ப்பால் இந்த நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த முடியவில்லை. மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுகவினர் இந்த விவகாரத்தில் பிரச்னையை எழுப்புகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு ஊழலில் மட்டுமே சிக்கித் தவிக்கிறது. இப்போது திடீரென எழுந்து லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகின்றனர். மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும்போது யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. 0.0001 சதவீதம் கூட அநீதி இழைக்கப்படாது.

தமிழகத்தில் திமுக ஆட்சி தமிழ் மொழிக்கு எதிராக செயல்படுகிறது. திமுக அரசின் ஊழலால் இளைஞர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். தொழில்களும் வெளியேறுகின்றன. மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அரசு அகற்றப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இதற்காக மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சிப்போம். மணிப்பூரில் அமைதி திரும்பியுள்ளது. அந்த மாநிலத்தில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் சந்தைகளும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. இவ்வாறு அமைச்சர் அமித்ஷா கூறினார்.

You Might Also Like

கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு

கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்

அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு

ராஜ்ய சபா தேர்தலுக்காக வேட்பாளர்கள் மனுதாக்கல்

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

TAGGED:Amit Shahelectionstelevisionஅமித்ஷாசட்டசபை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?