திருவிடைமருதூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மங்களாம்பிகை கோயில் பங்குனி உத்திர விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா பாடல்பெற்ற வரலாற்று ஸ்தலமான திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது பிராணநாதர் சமேத ஸ்ரீ மங்களாம்பிகை கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனி உத்திர விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. இதில் முதல் நாள் நேற்று இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அர்ச்சனைகளுக்கு பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட சுவாமிகளை பல்லக்கில் வைத்து வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.