தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே அருந்தவபுரம் கிராமத்தில் அதிகளவு மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
கோடை சாகுபடியாக உளுந்து, நிலக்கடலை உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மரவள்ளி கிழங்குகள் சாகுபடி இப்பகுதியில் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நாள் பயிராக இருந்தாலும் கூடுதல் வருவாயை மரவள்ளிக்கிழங்கு சாகுபடி அளிக்கிறது.
இந்த மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தயாரிக்க மற்றும் உணவு பொருட்கள் உற்பத்திக்கு அதிகளவு பயன்படுத்தப்படுவதால் தோட்டத்திலேயே வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து கொள்வதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். முறையாக பராமரித்து வந்தால் ஏழு அல்லது எட்டு மாதத்தில் கிழங்கு அறுவடை நடக்கும்.
வியாபாரிகளை ஆட்களை அழைத்து வந்து நேரடியாக அறுவடை செய்து உடனடியாக பணத்தையும் தந்து விடுவதால் தற்போது மரவள்ளி கிழங்கு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.