மேஷம் (Aries)
பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். காதலியால் மன நிம்மதியை இழக்கலாம். எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட வேலைகளை வீட்டில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், கவனமாக இருக்கவும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் சிறிது லாபம் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1

ரிஷபம் (Taurus)
உங்கள் தொழிலில் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். குடும்பத்தில் புதிய வீட்டிற்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் நடத்தவும் முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இல்லத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6, 1, 2, 9
மிதுனம் (Gemini)
வியாபாரத்தில் சில இடையூறுகளை சந்திப்பீர்கள், ஆனால் அவற்றை சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் கவனமாக இருக்கவும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து மரியாதையை அதிகரிப்பீர்கள். சகோதரர்களிடமிருந்து பண உதவி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 9, 4, 3
கடகம் (Cancer)
பிரிந்து போன குடும்பங்களை ஒன்றிணைப்பீர்கள். உங்கள் அறிவாற்றலுக்கு பாராட்டுகள் கிட்டும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். வீடு மற்றும் மனை போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். அரசு ஊழியர்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்திற்கான புதிய இடத்தில் செல்வாக்கு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 3, 8, 5
சிம்மம் (Leo)
பொல்லாங்கு பேசுபவர்களின் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். தொழிலில் நிதானம் காட்டுவது அவசியம். கூட்டுத் தொழிலில் நன்மையை எதிர்பார்க்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிதானமாக இருக்கவும், ஒப்பந்த வேலைகளில் சிரமம் அனுபவிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 7, 6
கன்னி (Virgo)
கணவன்-மனைவி உறவில் நீண்ட சங்கடங்களை சந்தோசமாக பேசி சரி செய்வீர்கள். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு குறைவதை உணர்வீர்கள். போட்டி பந்தயங்களில் நஷ்டம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 9
துலாம் (Libra)
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக இருப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மற்றும் அந்தஸ்து அதிகரிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும், இதன் மூலம் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். கவர்ச்சியாக பேசி காதலியின் மனதை கொள்ளை எடுக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 6, 9, 4, 3
விருச்சிகம் (Scorpio)
நெருக்கடிகளை கடந்து செல்வீர்கள். உடல் பாதிப்புகளை சிகிச்சையால் சரி செய்வீர்கள். மார்க்கெட்டிங் தொழிலில் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், அதனைக் கையாள்வதற்கான யோசனை வைக்கும். தனியார் துறையில் வருமானம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 9, 3, 8, 5
தனுசு (Sagittarius)
புத்திசாலித்தனத்தால் பணத்தை பெருக்குவீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலியால் பாதிப்பு ஏற்படும். தந்தை வழி உறவுகளால் சண்டை ஏற்படும். சுயதொழிலில் உயர்ந்த நிலை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3, 7, 6, 1
மகரம் (Capricorn)
கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இருமடங்கு எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். இடம் மாறி வருமானத்தை அதிகரிப்பீர்கள். மனைவியை மகிழ்ச்சிப்படுத்த எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். பயணங்களில் கவனமாக இருக்கவும். ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8, 1, 2, 9
கும்பம் (Aquarius)
சுவாசப் பிரச்சினையால் தந்தைக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டும். மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்யவும். குலதெய்வ வழிபாட்டால் உடல் கோளாறுகளை சரிசெய்யவும். அரசுப் வேலையில் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களில் கவனமாக செயல்படவும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8, 9, 4, 3
மீனம் (Pisces)
வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்களை சரி செய்வீர்கள். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். வெளி தொழில்களில் புதிய ஒப்பந்தங்கள் செய்யவும். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 3, 8, 5