சென்னை: வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:- வேளாண்-விவசாயிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளின் வட்ட அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் அறிவியல் நிறுவன விஞ்ஞானிகள், விவசாயிகளை அவர்களின் வருவாய் கிராமங்களில் நேரடியாகச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

வேளாண்மை-விவசாயி நலத்துறை மற்றும் துணைத் துறைகள், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மாதம் இருமுறை முகாம் நடத்தி பயன்பெறலாம். இந்த திட்டம் 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படும்.