திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மக்கடா காய் சாகுபடி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மலை மண் தோட்டத்தில் மா, பலா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழ மரங்களை நட்டுள்ளேன்.
இதுதவிர ஆலமரம், தேக்கு, மகோகனி, ஈட்டி போன்ற மர வகைகளையும் பயிரிட்டுள்ளேன். அந்த வரிசையில், பணப்பயிராக மக்கடாமியா செடியை வளர்த்துள்ளேன். ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயிரிடப்படுகிறது.
நம்மூர் மலை மண்ணில் ஓட்டு செடியை பயிரிட்டுள்ளேன். மூன்றாண்டுகளுக்கு மேல் மகசூல் தர ஆரம்பிக்கும். இதன் காய்கள் பச்சை நிறத்தில் கொத்தாக உருவாகும். இதன் காய்களை காயவைத்து பருப்புகளாக விற்பனை செய்யலாம். பாதாம் மற்றும் முந்திரி போன்ற மற்ற உலர் பருப்பு வகைகளை விட மக்காடமியா கொட்டைகள் அதிக விலை பெறுவதால், கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அவர் கூறியது இதுதான்.