வாரணாசி: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 20-வது தவணை நேற்று 9.7 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அதை வெளியிட்டார்.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மாற்றப்படுகிறது. இது தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.

இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக சுமார் ரூ.3,69,000 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தத் திட்டத்தின் 20வது தவணையான சுமார் ரூ.20,500 கோடி நேற்று 9.7 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தொகையை தனது சொந்தத் தொகுதியான உ.பி.யின் வாரணாசியில் இருந்து நேற்று வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு e-KYC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையங்களில் இதைச் சமர்ப்பிக்கலாம் என்று வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.