தஞ்சாவூர்: வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் தங்கள் பயலை குறுவை சாகுபடிக்காக தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் விதை நெல் விலை உயர்ந்துள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சாகுபடிக்காக ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து குறுவை சாகுபடியின் முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 30 கிலோ எடை கொண்ட விதை நெல் மூட்டை ரூ. 1,200 க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது விலை உயர்ந்து ரூ.1,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென இதை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.