புதுடில்லி: மத்திய அரசின் பிரதான் மந்திரி மாந்தன் யோஜனா திட்டம் குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் இதனை விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டமானது சிறு மற்றும் அடித்தட்டு விவசாயிகளுக்கு உதவ செயல்படுத்தி வருகிறது. இதில் இணையும் விவசாயிகளுக்கு, 60 வயது நிறைவடைந்த பிறகு, மாதம் பென்ஷனாக 3ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பலரும் இணைந்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த திட்டம் குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் இதனை விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.